புதுவையில் மதுக்கடைகள் மீண்டும் திறப்பு !

கொரோனா தொற்று பரவல் காரணமாக புதுவை அரசு ஊரடங்கை அறிவித்தது இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாக மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுக்கிடந்தன.

மேலும் இந்த நாட்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது.மதுபான கடைகளை திறக்க வேண்டுமென எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.