Weather update: தமிழகத்தில் சில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

Weather update: தமிழ்நாடு, புதுச்சேரிக்கான வானிலை முன் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், “கேரள கடலோர பகுதிகள் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 21.02.2022: தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22.02.2022: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி) ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

23.02.2022:தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

24.02.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

25.02.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Weather update in tamil nadu

இதையும் படிங்க: Gold and silver rate : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்