Lessons from bhagavatgita : கீதை சொல்லும் பாடம் !

கீதை சொல்லும் பாடம்

பகவான் கிருஷ்ணர் அர்ஜுனுக்கு அருளிய ஞான அறிவுரையே இந்த பகவத் கீதை.இதில் மனித வாழ்வு பற்றிய உண்மையான புரிதலை இந்த பகவத் கீதை எனும் புனித நூல் நமக்கு தருகிறது.இதை ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்தால் வாழ்வு சிறப்பாக இருக்கும்.

எவ்விதம் புகையால் நெருப்பும், அழுக்கினால் கண்ணாடியும் மறைக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் எவ்விதம் கருப்பையினால்- தசை கூட்டத்தினால் கரு மறைக்கப்பட்டிருக்கிறதோ, அவ்விதம் அந்த காமத்தினால் இந்த ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறது.

மனமகிழ்ச்சி, அமைதியான இயல்பு, பகவானை இடைவிடாது சிந்தித்து இருக்கின்ற இயல்பு, மனவடக்கம், உள்ளத்தூய்மை – இவையெல்லாம் மனதால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன.

துக்கத்தைப் போக்குகின்ற யோகம் அளவோடு உண்டு நடமாடுகின்றனவனுக்கும், கர்மங்களில் உரிய முயற்சி செய்கிறவனுக்கும், அளவோடு உறங்கி விழித்து இருப்பவனுக்கு மட்டுமே கைகூடுகிறது.Lessons from bhagavatgita

எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்துவிட்டு மமதை இல்லாதவனாக, அகங்காரம் அற்றவனாக, சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக இருக்கிறானோ, அவனே அமைதியை அடைகிறான். அதாவது அவனே சாந்தியைப் பெறுகிறான்.