நடிகை ஜெயந்தி காலமானார் !

இந்த வருடத்தில் நடிகர் மற்றும் நடிகைகள் நிறைய பேர் உடல்நல குறைவால் காலமாகியுள்ளனர்.தற்போது பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.

இவருக்கு வயது 76 .மேலும் இவர் தமிழ்,தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் 500 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் தமிழில் நீர்குமிழி, பாமாவிஜயம், எதிர்நீச்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

உடல்நல குறைவு காரணமாக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.கன்னட சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவர் நடிகை ஜெயந்தி.இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.