TN schools: மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை..!

tn_students
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு மறுதேர்வு

TN schools: இந்தியாவில் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டில் மார்ச் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வில் 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுகிறது. அத்துடன் இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர்.

இந்த தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். இத்தேர்வு மன திறன் சோதனை மற்றும் உதவித்தொகை சார் சோதனை என்ற இரண்டு தாள்களைக் கொண்டது. மேலும் இந்த தேர்வு குறித்து அரசு தேர்வுத் துறை இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடப்பு கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இத்தேர்வு எழுத தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்விற்கான விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கபட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அத்துடன் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேர்வு கட்டணமாக 50 ரூபாயும் சேர்த்து வருகிற 27ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பாக மேலும் கூடுதல் தகவல்களை பெற அரசு தேர்வுத்துறை இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க பள்ளிக்கு வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் இத்தேர்வுக்கான மேலும் சில கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: Secret For Hair Growth : தலைமுடி வளர உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை தேவை