‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பிறந்தநாள் இன்று !

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.இவரது நிஜ பெயர் டயானா மரியம் குரியன்.18 நவம்பர் 1984 ம் ஆண்டு பிறந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் நடித்துள்ளார்.ஃபோர்ப்ஸ் இந்தியா “பிரபலங்கள் 100”, 2018 பட்டியலில் இடம்பிடித்த ஒரே தென்னிந்திய பெண் நடிகை .75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் 2005 ம் ஆண்டு அய்யா திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.

தற்போது இவர் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் கதாநாயகி சார்ந்த திரைப்படங்கள் வருவது மிக குறைவு அந்த வகையில் நயன்தாரா அவர்களில் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெரும்.

தமிழ் சினிமாக்களில் முன்னணி நடிகர்களான ரஜினி,விஜய்,அஜித்,சூர்யா ,விஜய் சேதுபதி போன்ற அணைத்து நடிகருடனும் இவர் நடித்துள்ளார்.இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.மேலும் நயன்தாரா உடை மற்றும் அவரது ஹேர் ஸ்டைல் அனைத்தும் பிரபலமாகும்.

நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது இவர்கள் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

இன்று பிறந்தநாள் காணும் நயன்தாராவிற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.