தலித்தை கட்சியின் தலைவராக ஆகமுடியுமா?- எல்.முருகன்

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ள 7 திட்டமும் ஏற்கனவே மத்திய அரசு நடைமுறைப் படுத்திவிட்டது என்றும், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய திட்டங்களை அவர் அறிவித்து இருப்பதாகவும் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “எல்லா அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். ஆனால் ஒரு கட்சி மக்களை எப்படி ஏமாற்றுவது என்று சுறுசுறுப்பாக செயல்பட்டு நேற்று 7 திட்டங்களை அறிவித்தது. அந்த 7 திட்டங்களும் மத்திய அரசு ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்கள்” என்றார்.

தொடர்ந்து பேசிய எல்.முருகன், “நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 36 லட்சம் வீடுகளுக்குப் புதிதாகக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப் போகிறோம் என்கிறார். ஆனால் மத்திய அரசு இதை செய்து வருகிறது இன்னும் ஒருகோடி பேருக்கு செய்துகொடுக்க உள்ளது. எப்படி ஏமாற்றுவது எபதை ஸ்டாலினிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.