பெரியார் சிலை மீது வன்முறை வெறியாட்டம் – கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டு, பெரியார் சிலை மீது வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபகாலமாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலையை அவமதிக்கின்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசி களங்கப்படுத்தியிருப்பது வகுப்புவாத சக்திகளின் வெறிச் செயலாகவே நிகழ்ந்திருக்கிறது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.