சூப்பர்..தமிழகத்தின் கோவளம், ஈடன் பீச்களுக்கு நீலக்கொடி !

தமிழ்நாட்டின் கோவளம் கடற்கரை மற்றும் புதுச்சேரியின் ஈடன் கடற்கரைக்கு இரண்டிற்கும் மதிப்புமிக்க ‘நீலக் கொடி’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அமைப்பானது இந்த நீலக் கொடி சான்றிதழை வழங்கி வருகிறது.இதன் பொருள் உலகில் அழகான கடற்கரை மற்றும் சுத்தமான கடற்கரை என்பதாகும்.

மேலும் இந்தியாவில் 8 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.குஜராத்தின் சிவராஜ்பூர், டியூவின் கோக்லா, கர்நாடகாவின் காசர்கோடு மற்றும் படுபித்ரி, கேரளாவின் கப்பாட், ஆந்திராவின் ருஷிகொண்டா, ஒடிசாவின் கோல்டன் மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் ராதாநகர் கடற்கரை ஆகியவையும் (2020 ல் ‘ப்ளூ கொடி’ சான்றிதழ் பெற்றது) என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் 2 கடற்கரைகளுக்கு நீலக் கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கோவளம் கடற்கரை மற்றும் புதுவையில் ஈடன் கடற்கரை.

இதையும் படிங்க : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !