RIP Shanmuganathan: மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் விழா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
ஆனால், அப்போது கருணாநிதியிடம் உதவியாளராக இருந்த சண்முகநாதன், திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில், சண்முகநாதனுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சண்முகநாதனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதாவது, கருணாநிதியின் கோபாலபுரம் வீடு தொடங்கி, தமிழகத்தின் அரசியல் மேடைகள் என்று விரிந்து, செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரை, கருணாநிதி செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூடவே சென்று, அவருக்குத் தேவையான உதவிகளை சண்முகநாதன் செய்து வந்தார்.
இப்படியாக, கிட்டத்தட்ட 50 ஆண்டு காலம் கருணாநிதியின் நிழல் போல இருந்த சண்முகநாதன், இன்றைய தினம் திடீரென்று உயிரிழந்தார்.
உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதன், மாரடைப்பால் இன்றைய தினம் காலமானர். உயிரிழந்த சண்முகநாதனுக்கு வயது 80.
இதையும் படிங்க: CM dashboard: அரசுத்துறை அலுவல்களை முதல்வர் நேரடியாக கண்காணிக்க புதிய திட்டம் துவக்கம்



