தற்போது முகக்கவசம் முக்கிய தேவையாக மாறிவிட்டது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தங்கத்தில் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்துடன் வலம் வருகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்ற அந்த பிரமுகர் ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க முகக்கவசத்தை பிரத்யேகமாக தயாரித்து அணிந்து வலம் வருவது அந்த பகுதி மக்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
இவரை உள்ளூர்வாசிகள் ‘தங்க பாபா’ என்றே அழைக்கின்றனர். தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு காரணமாக அதிக நகைகளை அணிவதாக அவர் தெரிவித்துள்ளார்



