Kannada actor Kalatapasvi Rajesh died : கன்னட நடிகர் ராஜேஷ் காலமானார்

kannada-actor-rajesh-passed-away
கன்னட நடிகர் ராஜேஷ் காலமானார்

Kannada actor Kalatapasvi Rajesh died : பிரபல கன்னட நடிகர் ராஜேஷ், தனது 89வது வயதில் தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார்.ஒரு வாரத்திற்கு முன்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அவரது வாழ்க்கையில், ராஜேஷ் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது சுயசரிதையான ‘கலா தபஸ்வி ராஜேஷ் ஆத்மகதே’ 2014ல் வெளிவந்தது.இவரது மகள் ஆஷா ராணி தென்னிந்திய நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் மனைவி.ராஜேஷ் 1935ல் பெங்களூருவில் முனிச்சவுடப்பாவாகப் பிறந்தார். சிறுவயதிலேயே நாடகத்துறையில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு பெற்றோருக்குத் தெரியாமல் சுதர்சன நாடக மண்டலியில் சேர்ந்தார்.

அரசு அலுவலகத்தில் தட்டச்சராகப் பணியாற்றத் தொடங்கிய அவர், சக்தி நாடக மண்டலி என்ற பெயரில் சொந்த நாடகக் குழுவைத் தொடங்கினார்.

கங்கே கௌரி’, ‘சதி சுகன்யா’, ‘பெலுவலடா மதில்லி’, ‘கப்பு பிலுபு’, ‘பிருந்தாவனா’ ஆகியவை இவரது முக்கியப் படங்கள். கன்னட திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டார்.Kannada actor Kalatapasvi Rajesh died

இறுதியாக அவர் கவுரவ வேடத்தில் நடித்த ‘ஓல்ட் மங்க்’ திரைப்படம் வரும் பிப்.25 வெளியாகிறது.சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜேஷ் உயிரிழந்தார். இன்று மாலை 6 மணியளவில் அவரது இறுதிச் சடங்குகள் பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க :Arabic kuthu: நான்கே நாளில் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்த ‘அரபிக் குத்து’ பாடல்

இதையும் படிங்க : Tamil Nadu urban local body polls: மதுரை மேலூர் வாக்குச்சாவடியில் கிளம்பிய ஹிஜாப் சர்ச்சை

(kannada actor rajesh passed away at the age of 89 )