காஞ்சனா 3 படத்தில் நடித்த நடிகை மரணம் !

கொரோனா தொற்று கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.மேலும் இந்த வருடம் பல உயிரிழப்பவுகள் நிகழ்ந்துள்ளன.நிறைய பிரபலங்களும் இந்த வருடம் இறந்துள்ளனர்.

காஞ்சனா 3 படத்தில் ரோஸி கதாபாத்திரத்தில் நடித்த ரஷ்ய நடிகை கோவாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படத்தில் இவர் நடித்திருந்தார்.

இவர் பெயர் அலெக்ஸாண்ட்ரா ஜாவி .இவர் கோவாவில் உள்ள வாடகை குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவருக்கு வயது 24. இவர் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்.

தற்போது அவர் உடலை கோவா மெடிக்கல் காலேஜில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.மேலும் இன்னொரு ரஷ்ய பெண்ணும் மர்மமான முறையில் இறந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.