காலம் கடந்து யோசிக்கும் கலைஞனுக்கு இன்று பிறந்தநாள்..!

தனக்கு தவறென்று பட்டதைத் தயங்காமல் பேசும் கலைஞன், 67வயதிலும் கற்றுக் கொண்டிருக்கும் இளைஞன் கமல்ஹாசன்.

ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்தவர் கமல்ஹாசன். நான்கு குழந்தைகளில், கடைக்குட்டியாகப் பிறந்த கமலுக்கு, இளம் வயதிலிருந்தே, படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், மிகுதியான நேரத்தை அதில் செலவிட்டார்.

மலைப் பற்றய சுவாரசியமான விஷயங்கள்:

எவ்வளவு நேரம் ஆனாலும், நின்றுகொண்டே பேசுவதுதான் கமல் ஸ்டைல். எட்டு மணி நேரம் ஆனால் கூட, கொஞ்சமும் முகம் சுளிக்காமல் அவ்வளவு உற்சாகத்துடன் நின்றபடியே பேசிக் கொண்டிருப்பார்.

எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் உடற்பயிற்சி செய்யத் தவறுவதில்லை. காலில் ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்தபோது கூட, சில மாதங்களிலேயே உடற்பயிற்சியை ஆரம்பித்துவிட்டார்.

இவர் போகாத உலக நாடுகளே இல்லை. ஷூட்டிங் இல்லையென்றால், ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு கிளம்பி விடுவார். சென்னையில் அடிக்கடி விசிட் செய்கிற இடம், நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டல்.

நாமெல்லாம் கமல்ஹாசனை ‘என்சைக்ளோபீடியா’ என்று குறிப்பிடுவது உண்டு. ஆனால், அவரோ எழுத்தாளர் அனந்துவை ‘என்சைக்ளோபீடியா’ என்று அழைப்பார். சினிமா, டெக்னாலஜி என எந்த விஷயமாக இருந்தாலும் அவருடன் விவாதித்திருக்கிறார்.

சாப்பாட்டைப் பொறுத்தவரை ‘இதுதான் வேண்டும்’, ‘அதுதான் வேண்டும்’ என்ற கண்டிஷன் கிடையாது. எந்த உணவாக இருந்தாலும் ரசித்து, ருசித்து அளவாகச் சாப்பிடுவார்

இதையும் படிங்க: தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்