குழந்தைகளுக்கு 65 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு

கொரோனா தொற்று பேரிடரிலிருந்து மீள உதவும் நடவடிக்கையாக, 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு, தலா, 65 ஆயிரம் ரூபாய் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜப்பான் அரசின் பொருளாதார சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தின்படி, குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு 1 லட்சம் யென் வழங்கப்பட உள்ளது. இது இந்திய மதிப்பில், சுமார் 65 ஆயிரம் ரூபாய். இதற்கு வருமானம் ஒரு முக்கியமல்ல.

அனைத்து குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடைவார்கள் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான முழு விவரம், வரும் 19 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: டிக் டாக் சுகந்தியை கைது..!