பாதுகாப்புத் துறைக்கான பட்ஜெட்டை வெகுவாக அதிகரித்த ஜப்பான்

வரும் ஆண்டிற்கான பாதுகாப்பு துறை பட்ஜெட்டை ஜப்பான் அமைச்சரவை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஆண்டில் ஜப்பான் சுமார் 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாயை பாதுகாப்புத்துறைக்காக அறிவித்துள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் யோஷ்ஹிதே சுகா ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜப்பான் நாட்டிற்கு அழுத்தம் தரும் வகையில் சீனா மற்றும் வட கொரிய தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகின்றன. குறிப்பாக தென் மற்றும் கிழக்கு சீன கடல் பகுதியில் சீனா தொடர்ந்து ராணுவ கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது.

இதற்கு பதில்தரும் விதமாக ஜப்பான் கடந்த எட்டு வருடங்களாகவே பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்துவருகிறது. அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் நடவடிக்கைகளை தொடர்ந்து வலுப்படுத்தும் விதமாகவே தற்போதைய பிரதமர் யோஷ்ஹிதே சுகா இந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.