ஐபிஎல் டி20- மும்பை இந்தியன்ஸ் அணி -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதல்

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடவுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் தோல்வி அடைந்தாலும் அடுத்து கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் ஆர்சிபி அணியும் முதல் போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தியது பிறகு அடுத்து பஞ்சாபிடம் அடி வாங்கியது.

கொல்கத்தா அணிக்கு அடுத்து ஆர்சிபி அணியும் மும்பை அணியும் ஃபேவரைட் எதிரியாக திகழ்கிறது. இவ்விரு அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் சந்தித்ததில் மும்பை 19 முறையும் பெங்களூரு 6 முறையும் வென்றுள்ளது. கடந்த 8 போட்டிகளில் மட்டும் ஆர்சிபி அணிக்கு எதிராக மும்பை 7 முறை வென்றுள்ளது. இதனால் இன்றைய ஆட்டம் பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

இன்றைய  போட்டியில் பெங்களூர் அணி  வெற்றி பெற வேண்டுமென்றால் கேப்டன் கோலி ஃபார்முக்கு  திரும்பவேண்டும். அவருடன் சேர்ந்து ஆரோன் பின்ச் டிவில்லியர்ஸ் ஆகியோர் துணை இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்களை பொருத்தவரை சாஹலை தவிர வேறு யாரும் சரியாக செயல்படவில்லை.

இதனால் இன்றைய போட்டியில் ஸ்டெயின் உமேஷ் யாதவுக்கு பதிலாக உதானா, முகமது சிராஜ் ஆகியோரை எதிர்பார்க்கலாம்‌.  மும்பை அணிக்கு ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அவர்களது ஃபார்ம் இன்றும் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பந்து வீச்சைப் பொறுத்தவரையில் பும்ராவுக்கு பக்கபலமாக டிரெண்ட் போல்ட், ஜேம்ஸ் பேட்டின்சன் செயல்பட்டு வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே நிலைதான் இன்றும் கிளம்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here