ஐபிஎல் கிரிக்கெட்டில் சாதனை படைத்த பும்ரா

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தனது 100 ஆவது விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.

பெங்களூருக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்து அசத்தியுள்ளார். மேலும் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இந்திய அளவில் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பியூஸ் சாவ்லா அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.