ராஜஸ்தான் அணி வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர்களில் கிறிஸ் மோரிஸின் அதிரடியான ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. டேவிட் மில்லர் மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் கொடுத்தார். கடைசி ஓவர்களில் கிறிஸ் மோரிஸ் அதிரடி காட்ட போட்டியில் மீண்டும் பரபரப்பு தொற்றி கொண்டது.

ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. டெல்லி அணி சார்பில் கடைசி ஓவரை டாம் குர்ரன் வீசினார். மோரிஸ் எதிர் கொண்ட முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் சிக்ஸர் விளாசி அசத்தினார். இதனால் 4 பந்துகளுக்கு 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 3-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் 4-வது பந்தில் சிக்ஸர் அடித்து அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.