ஐபிஎல் 2020: டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு!

கொல்கத்தா – டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் இன்று (அக்.24) நடைபெறும் 42ஆவது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இன்றைய ஆட்டத்தில் கேகேஆர் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருகியுள்ளது.