இன்று சர்வதேச அனிமேஷன் தினம்..!

அனிமேஷனின் முக்கியத்துவம், அழகை ஒவ்வொரு நாளும் ‘டிவி’யில் காண்கிறோம். அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப் படங்கள் தற்போது குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

அனிமேஷனின் பயன் ‘டிவி’, இசை, மீடியா, இன்டர்நெட், விளையாட்டு துறைகளில் பயன்படுகிறது.

பிரான்சின் சார்லெஸ் எமிலி ரொனால்ட், 1892 அக். 28ல் உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை வெளியிட்டார். இச்சாதனையை நினைவுகூறும் விதமாக 2002ல் இத்தினத்தை சர்வதேச அனிமேஷன் சங்கம் துவக்கியது.

கற்பனை உலகில் சஞ்சரிக்கும் கலைஞர்களுக்குக் கையில் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இத் துறை. அதிலும் கடந்த 20 ஆண்டுகளில் பிக்சார் போன்ற நிறுவனங்களின் வரவும், மிக நுண்ணிய உணர்வுகளைக் கூட துல்லியமாக காட்டத்தக்க தொழில்நுட்பங்களும், பைண்டிங் நிமோ, அய்ஸ் ஏஜ், டாய் ஸ்டோரி, கார்ஸ், வால் ஈ, அவதார் போன்ற படங்கள் மூலம் திரைப்படங்களைத் தாண்டிய சாத்தியங்களை நனவாக்கியிருக்கின்றன. அதனால் தான் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த அசைப்படங்களுக்கான விருது என்றொரு பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்ற குரல் 2001 லேயே வென்றது.

இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்