Intel: ரஷியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இன்டெல் நிறுவனம்

சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இன்டெல் நிறுவனம்
சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இன்டெல் நிறுவனம்

Intel: உக்ரைன் மீது ரஷியா 42-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையே, உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ஆப்பிள், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும்,
கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும் தங்களது சேவையை ரஷியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைத்தன.

இந்நிலையில், ரஷியாவில் அனைத்துப் புதிய வணிகங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என இன்டெல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. நாங்கள் ரஷ்யாவில் அனைத்து வணிக நடவடிக்கைகளையும் நிறுத்திவிட்டோம். உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை கண்டிப்பதிலும், அமைதிக்கு விரைவாக திரும்ப அழைப்பு விடுப்பதிலும் இன்டெல் தொடர்ந்து உலகளாவிய சமூகத்துடன் இணைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.

(Intel suspends operations in Russia, will continue to support Russian employees)

இதையும் படிங்க: Andhra: ஆந்திராவில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டர்களாக பணியாற்றும் கணவன்-மனைவி