சென்னையில் உள்ளவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இன்ஸ்டாகிராம்!

சென்னையில் உள்ள இன்டாகிராம் படைப்பாளர்களில் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கண்டறிந்து, இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள் குறித்தும், இன்ஸ்டாகிராம் செயலியைச் சிறப்பாகப் பயன்படுத்தி தங்களது காணொலிகளை எப்படிப் பிரபலப்படுத்துவது என்பது குறித்தும் விளக்கப்படும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய பேஸ்புக் இந்தியா இயக்குநர் மனீஷ் சோப்ரா, “இன்ஸ்டாகிராம் செயலியிலுள்ள புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது நாங்கள் சென்னையைச் சேர்ந்த படைப்பாளர்களை வளர்த்து பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இதன்மூலம் அடுத்தகட்டமாக நாட்டின் மிகப்பெரிய டிஜிட்டல் உள்ளடக்கப் படைப்பாளர்களை (digital content creators) அடையாளம் காணலாம்” என்றார்.

பேஸ்புக் நிறுவனத்தின் ஃபியூயல் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில் ‘Born on Instagram’ குறித்து அறிவிக்கப்பட்டது.