indian traditional saree : போச்சம்பள்ளி தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தை அடுத்து 50 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு நெசவாளக் கிராமம். இங்கு கைத்தறி மற்றும் ஐகாட் பட்டு நெசவு தான் பிரதானத் தொழில். போச்சம்பள்ளி ஐகாட் புடவைகள் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் எத்தனை ஸ்பெஷலோ அத்தனைக்கத்தனை தமிழ் நாட்டு மக்களுக்கும் மிகப் பிடித்தமான ஒரு புடவையாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது.
இந்த வகைப் புடவைகளில் தனித்துவமாக பெருமை சேர்ப்பவை புடவைகளின் பளீரிடும் வண்ணங்களும் அவற்றில் பயன்படுத்தப்படும் ஜியோமெட்ரிக்கல்(கணிதம்) டிஸைன்களும் தான். ஜியோமெட்ரிகலை அடிப்படையாகக் கொண்ட டிஸைன்களில் உண்டாக்கப்பட்ட பூக்கள், இலைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கலைப் போச்சம்பள்ளி ஐகாட் பட்டில் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அந்த நெசவாளர்களுக்கு நெசவுக்கலை மீதான துல்லியமான அறிவும், தனித்திறமையும் இருந்தாலொழிய இத்தகைய நுட்பமான டிஸைன்களுடன் புடவை நெசவு என்பது இயலாத காரியமே

தற்போது போச்சம்பள்ளி புடவைகள் என அழைக்கப்பட்டாலும் இந்தப் புடவைகளின் பூர்வீகம் பிரிவினைக்குப் பின்னான தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சிராலா நகரமே. சிராலா என்றால் தெலுங்கில் ’சீர’ என்றும், தமிழில் ’புடவை’ என்றும் அர்த்தம். ஆந்திராவில் இந்த நகரத்தை ’சிட்கு’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆரமபத்தில் சிராலாவில் பிரதானமாகத் தயாரிக்கப்பட்டவை நம்ம ஊர் லங்கோடுகள், பளீரிடும் அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்பட்ட லுங்கிகள், டர்பன்கள் போன்றவை தானாம்! அவை இங்கிருப்பவர்களுக்காக மட்டுமல்ல 1930 களில் பர்மா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் அவை ’ஆசியா ருமால்கள்’ என்ற பெயரில் பெருமளவில் ஏற்றுமதியாகின. ’ருமால்’ என்றால் கர்சீப் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாமாம். முதலில் துண்டுத் துணியாக, துணி பெல்ட்டாக இப்படித் தொடங்கி வளர்ந்த இந்த ஊரின் நெசவுக் கலையில் கைத்தறிப் புடவை நெசவு என்பது 1960 க்குப் பிறகு தான் பரவலாக தொடங்கப்பட்டது. சிராலாவில் தொடங்கிப் பின் அது போச்சம்பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டது.

போச்சம்பள்ளி புடவை நெசவுக்குத் தேவையானவை:
போச்சம்பள்ளி ஸ்டைலில் ஒரு கைத்தறிப் புடவையோ அல்லது ஐகாட் பட்டுப் புடவையோ நெசவு செய்யவேண்டுமெனில் அதற்கு சுத்தமான பருத்தி நூல், பட்டு நூல், ஜரிகை நூல் இவை மூன்றும் தேவை.
போச்சம்பள்ளி கைத்தறி நெசவுத் தொழில்நுட்பம்:
போச்சம்பள்ளி நெசவுத் தொழில்நுட்பம் என்பது ’ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பத்தை’ அடிப்படையாகக் கொண்டது. அதாவது புடவையில் நாம்
விரும்பும் டிஸைன்களைக் கொண்டு வரும் முன் சாயமேற்றும் வேலை நடைபெறும். அப்படிச் சாயமேற்றும் போது பழைய முறைப்படி நாம் விரும்பும் இடங்களில் மட்டும் ஸ்பெஷல் மோடிஃப்கள் மூலம் அழகான டிஸைன்களை நெசவு செய்வதற்கு ஒதுக்கிக் கொண்டு முந்தானைப் பகுதியிலோ அல்லது உடல்பகுதியிலோ மீதமுள்ள இடங்களில் சாயம் பரவும் வகையில் சாயமேற்றும் முறைக்கு ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பம் என்றூ பெயர். இந்த வகை சாயமேற்றும் தொழில்நுட்பம் புடவையின் வார்ஃப் களில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வார்ஃப் ஐகாட்’ என்றும், வெஃப்டில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வெஃப்ட் ஐகாட்’ என்றும் கூறப்படுகிறது. சில சமயங்களில் வார்ஃப், வெஃப்ட் இரண்டிலுமே இந்த வகை ரெஸிஸ்ட் டையிங் முறை பயன்படுத்தப் பட்டிருந்தால் அதற்கு ’டபுள் ஐகாட்’ என்று பெயர். இப்போதைய நவீன டிரெண்டுக்கு ஏற்றவகையில் ஐகாட் நெசவாளர்கள் பாரம்பரிய மயில், யானை, கிளி, டைமண்ட், மலர்கள் போன்றவற்றை டபுள் ஐகாட் முறையில் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப மனம் கவரும் வகையில் நெய்து தர முடிவது தான் போச்சம்பள்ளி ஐகாட் புடவைகளின் தனிச் சிறப்பு.
இப்படிப்பட்ட போச்சம்பள்ளி புடவை மார்க்கெட்டில் 6000 முதல் 15000 வரை விற்பனை ஆகிறது. இதனை குறைந்த விலையில் வாங்க விரும்பினால் ஒன்பது ஒன்பது நான்கு நான்கு ஒன்பது ஏழு ஒன்பது ஒன்னு மூன்று நான்கு என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: sania mirza: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு!!..
indian traditional saree in Pochampally



