Indian shooter died: பிரபல இளம் வீராங்கனை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Indian shooter
பிரபல இளம் வீராங்கனை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Indian shooter died: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேசிய அளவில் பதக்கம் வென்ற இவர், சமீபத்தில் முடிவடைந்த 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்றதால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டு அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் கவுர் சந்த்.

போட்டியில் தோற்றதால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் தற்கொலைக்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Covid-19 in colleges: கல்லூரியில் 12 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

Covid-19 in colleges: கொரோனா தொற்று, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. கடந்த வாரம் அண்ணா பல்கலைகழக மாணவர்கள் ஒன்பது பேருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அனைத்து கல்லூரி வளாகங்களில் கண்கானிப்பு மற்றும் கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால், பாதிக்கப்பட்ட செவிலியர் மாணவர்கள் எண்ணிக்கை பன்னிரண்டு ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அனைவரும் நலமாக உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் , சென்னையில் உள்ள பல்கலைகழகம் மற்றும் கல்லூரி வளாகங்களிலும், வகுப்பறைகளிலும் விடுதிகளிலும், கேன்டீன்களிலும் மாணவர்கள் கொரோனா தொற்று தடுப்பு விதிகளை கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: bipin rawat : பல்கலைகழகத்திற்கு பிபின் ராவத் பெயர் !

இந்திய ஆயுதப்படைகளின் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் ப அவர்கள் பயணம் செய்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் மறைந்தனர்.

தமிழகத்தில் புதன்கிழமை ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 13 பேரில் பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பிரார் சதுக்கத்தில் நடைபெற்றது.

ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகாவின் இறுதிச் சடங்குகளை அவரது மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி செய்தனர்.தமிழ்நாட்டின் குன்னூர் அருகே இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஜெனரல் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப்படை வீரர்களுடன் புதன்கிழமை உயிரிழந்தார்.

இந்நிலையில் பிபின் ராவத் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட்டில் அவரது நினைவாக புதிதாக கட்டிவரும் பல்கலைகழகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என சட்டமன்றத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது . இதற்கு பல சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில் பல்கலைகழகத்திற்கு அவரது பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Simbu Hospitalized: நடிகர் சிம்பு மருத்துவமனையில் அனுமதி..!

இதையும் படிங்க: bipin rawat : பல்கலைகழகத்திற்கு பிபின் ராவத் பெயர் !

இதையும் படிங்க: rain in tn : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு !