புதிய கேப்டன் இவரா !

டி20 போட்டிகள் நவம்பர் 17 ஆம் தேதி ஜெய்ப்பூரிலும், நவம்பர் 19 ஆம் தேதி ராஞ்சியிலும், நவம்பர் 21 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும்.

டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் இந்திய அணி பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த போட்டியின் இரண்டு தொடக்க ஆட்டங்களிலும் அவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

இந்திய அணி முதலில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. மேலும், உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது இதுவே முதல்முறை. டி20 உலகக் கோப்பையில் இது ஒரு மோசமான தோல்வி.

நவம்பர் மாதம் நியூசிலாந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நவம்பரில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன.

இருப்பினும், பிஸியான அட்டவணை காரணமாக பல மூத்த வீரர்கள் டி20 தொடரில் ஓய்வெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வீரர்கள் நீண்ட காலமாக தொடர்ந்து போட்டிக்கு போட்டியாக விளையாடி வருகின்றனர்.டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் தயாராகிவருவதாக தெரிகிறது.