Corona Virus: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை கடந்தது..!

தமிழகத்தில் 100க்கும் கீழ் குறைந்த கொரோனா

Corona Virus: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன்தின பாதிப்பான 949 மற்றும் நேற்றைய பாதிப்பான 975-ஐ அதிகரித்துள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 42 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 954 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரத்து 788 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 186 கோடியே 51 லட்சத்து 53 ஆயிரத்து 788 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: Boris Johnson: போரிஸ் ஜான்சன் வரும் 21-ம் தேதி இந்தியா வருகை