Omicron variant : பிரிட்டனில் அதிகரிக்கும் ‘ஒமைக்ரான்’

omicron-virus-discovery-first-time-in-deer
மான்களில் ஒமைக்ரான்

Omicron variant: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. ‘இது வெறும் துவக்கம் தான்’ என, ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த மாதம் மிகப் பெரிய பாதிப்புகள் வரக்கூடும் என்பதால், மருத்துவமனைகளை தயார் நிலையில் இருக்கும்படி லண்டன் மேயர் கேட்டுக் கொண்டுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில் கடந்த 17ம் தேதி, 25 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியானது. இந்த வகை தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் இதுவரை உயிர்இழந்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. ‘தொற்று கட்டுப்பாட்டு விதிகளை தீவிரப்படுத்தாவிட்டால், ஒரே நாளில் 3,000 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்’ என, பிரிட்டன் அரசின் அவசரகால அறிவியல் ஆலோசனை குழு எச்சரித்துள்ளது.

லண்டன் நகர மேயர் சாதிக் கான் கூறியதாவது:அடுத்த மாதம் லண்டனில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் வரக்கூடும். அரசு ஆதரவுடன் பொது சுகாதார அமைப்புகள் இணக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. லண்டனில் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இந்த வாரத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.சுகாதார பணியாளர்கள் வேலைக்கு வருவதும் குறைந்துள்ளது. நிலைமையின் தீவிரத்தை புரிய வைக்கவே இதை சொல்ல வேண்டி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.லண்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில் 80 சதவீதம் பேரிடம் ஒமைக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிறிஸ்துமஸ் முடிந்து இரண்டு வாரங்களுக்கு பின், அலுவலகம் தவிர இதர இடங்களில் உள்ள மூடிய கட்டடங்களுக்குள் மக்கள் திரள தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.ஓட்டல்கள், மதுபான கூடங்கள் திறந்தவெளியில் இயங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ”முழுமையான ஊரடங்கு விதிக்கப்படாது,” என, பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார்.

முக கவசம் பாதுகாக்குமா?

பிரிட்டனை சேர்ந்த மருத்துவ பேராசிரியர்கள் கூறியதாவது:பேச்சு, தும்மல், இருமல் போன்ற செயல்களின்போது நம் வாய் மற்றும் மூக்கில் இருந்து எச்சில் துளிகள் மிக சிறிய துகள்களாக வெளியேறுகின்றன. இவை ஐந்து மைக்ரான்கள் அளவுக்கு இருக்கும். இவற்றை, ‘ஏரோசோல்’ என அழைக்கிறோம். இதில் 100 மைக்ரான் அளவு இருக்கும் துகள்களை, ‘டிராப்லெட்’ என அழைக்கிறோம்.ஒவ்வொரு முறை மூச்சு விடும் போதும், இருமும் போதும் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய துகள்கள் வெளியேறுகின்றன.

இதில் பெரிய துகள்கள் உடனடியாக தரையில் விழுந்துவிடும். சிறிய துகள்கள் பல மணி நேரம் காற்றில் மிதக்கும். எனவே சாலையில் செல்லும் போது, மருத்துவமனை, ஓட்டல்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டடங்களுக்குள் இருக்கும்போதும், இந்த துகள்கள் நம் சுவாசக் குழாய்க்குள் எளிதில் நுழைந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நேரங்களில் முக கவசம் நம்மை பாதுகாக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதையும் படிங்க: முடி நீளமா அழகா இருக்கும் ரகசியம் இதுதான்..!

(increase of omicron variant in britain)