Income Tax raid at Master producer house : மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை !

income Tax raid at Master producer house : மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை
மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை

Income Tax raid at Master producer house : நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் மற்றும் அவரது உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்

சேவியர் பிரிட்டோவின் ஆதம்பாக்கம் வீடு மற்றும் அடையாறு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சேவியர் பிரிட்டோவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் மொபைல் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டதே இதற்குக் காரணம் என ரெய்டு தொடர்பான முதல் அறிக்கை கூறுகிறது. இருப்பினும், வருமான வரித்துறை அதிகாரிகளோ அல்லது சேவியர் பிரிட்டோ குழுவினரோ இதுவரை தெளிவான அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.Income Tax raid at Master producer house

ஷியோமி நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதியை கையாள்வதில்(logistics) பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : முடி வளர சின்ன சின்ன ரகசியம்..!