Home Uncategorized நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி – கே.எஸ்.அழகிரி

நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி – கே.எஸ்.அழகிரி

0
நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி – கே.எஸ்.அழகிரி

பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதி என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளிட்டுள்ளார்.

இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக மக்கள் வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்போகிறார்கள். அதேபோல, 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அகற்றப்படுவதற்கு முன்னோட்டமாக பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆதரவு பெற்ற நிதிஷ்குமார் ஆட்சி அகற்றப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது.

நரேந்திரமோடிக்கு எதிராக அரசியல் காற்று வீச ஆரம்பித்துவிட்டது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையில் ஈடுபாட்டுள்ள கட்சிகளுக்கு நம்பிக்கையூட்டுகின்ற வகையில் பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவரப் போகின்றன.