குஷ்புவிற்கு பதவி மாற்றம்?

சமீபத்தில், பா.ஜ.,வில் இணைந்த நடிகை குஷ்புவிற்கு, விரைவில் முக்கிய பதவி கிடைக்கவுள்ளதாக, டில்லியில் பேச்சு அடிபடுகிறது. ஆனாலும், ராஜ்யசபா எம்.பி., பதவி கிடைக்காது என்கின்றனர்,

கட்சியின் மூத்த தலைவர்கள். பா.ஜ., வின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ள நிலையில், குஷ்புவிற்கு என்ன பதவி கிடைக்கும் என்பது தான், பேச்சாக உள்ளது. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்படலாம் என சிலர் கூறுகின்றனர்.

மேலும், பா.ஜ., தேசிய தொழிலாளர் அமைப்பின், தென் மாநில தலைவராகவும், குஷ்பு நியமிக்கப்படலாம் என டில்லியில் சொல்லப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர், கட்சி தலைவர் நட்டாவிற்கு நெருக்கமானவர்கள்.