RIP Ilasai sundaram : இளசை சுந்தரம் காலமானார் !

இளசை சுந்தரம் காலமானார்

RIP Ilasai sundaram : பிரபல எழுத்தாளரும், மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநருமான இளசை சுந்தரம் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் இன்று காலமானார். ஆண்டாள்புரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1970 முதல் 1976 வரை எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1976 இல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பில் எழுத்தாளராகப் பணியாற்றினார். 50 க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியுள்ளார்.RIP Ilasai sundaram

மாத இதழ்களில் 50 நாடகங்கள், 175 இலக்கியக் கட்டுரைகள், 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளிட்டவற்றை இளசை சுந்தரம் எழுதியுள்ளார்.இறுதியாக மதுரை வானொலி மற்றும் பொதிகை தொலைக்காட்சி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

வானொலியில் தங்கக் கப்பல் என்ற குழந்தைகளுக்கான தொடர் நாடகத்தை எழுதி, தயாரித்து வழங்கினார்.இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை விடுதலையின் கதை எனும் தலைப்பில் குழந்தைகளுக்குக் கதை போல தொகுத்து வழங்கினார்.

இதையும் படிங்க : rajendra balaji : பெங்களூரு விரைந்தது தனிப்படை !