Merry Christmas: கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அனுப்புவது எப்படி…???

merry Christmas
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

Merry Christmas: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறந்தநாள் தான் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் டிசம்பர் மாதம் முழுவதும் மக்கள் கிறிஸ்துமஸை கொண்டாட தயாராகிவிடுவார்கள். குறிப்பாக கிறிஸ்துமஸ் துவங்கி புத்தாண்டு வரை முழுவதுமாக கொண்டாட்டம் தான்.

கிறிஸ்துமஸ் தினத்தில் கிறிஸ்தவர்கள் சர்ச்சிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்வார்கள். அன்றைய நாளில் கிறிஸ்துமஸ் மரம், அலங்கார மின் விளக்குகள், ஸ்டார்கள், சான்டாகிளாஸ் என அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா ஆகிய விஷயங்கள் மிகவும் பிரபலமானது. இந்த நன்நாளில் நம் நமது நண்பர்கள், உறவினர்கள், நமக்கு நெருக்கமானவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளவேண்டும்.

சில எளிய படிகளில் உங்கள் மொபைலில் இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை டவுன்லோட் செய்து அனுப்புவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

படி 1: கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர் பேக்குகளை இன்ஸ்டால் செய்தல்
கூகுள் ப்ளே ஸ்டோரில் பல ஸ்டிக்கர் பேக்குகள் உள்ளன. உங்கள் மொபைலில் ப்ளே ஸ்டோரைத் திறந்து “கிறிஸ்துமஸ் ஸ்டிக்கர்கள்” என்று தேடி, ஆப்ஸில் ஒன்றை இன்ஸ்டால் செய்யவும்.

படி 2: வாட்ஸ்அப்பில் ஸ்டிக்கர்களைப் பயன்படுத்துதல்:
வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் ஸ்டிக்கர்களை அனுப்ப விரும்பும் தனிப்பட்ட சாட் அல்லது குரூப் சாட்டிற்கு செல்லவும். ஈமோஜி பொத்தானைத் திறந்து வலதுபுறத்தில் உள்ள ஸ்டிக்கர்கள் டாபிற்குச் செல்லவும். இங்கே, நீங்கள் பல ஸ்டிக்கர் பேக்குகளைக் காண்பீர்கள். அவற்றில் நீங்கள் படி 1 இல் இன்ஸ்டால் செய்தது இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட ஸ்டிக்கர் பேக்கைத் திறக்க ஸ்டிக்கர் பேக் தலைப்பைத் தட்டவும். நீங்கள் எந்த ஸ்டிக்கரை அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்க ஸ்க்ரோல் செய்யவும். என்ன ஸ்டிக்கர்களை அனுப்புவது என்பதை முடிவு செய்தவுடன், அவற்றைத் தட்டி அனுப்பவும்.

புத்தாண்டு 2022 உட்பட வேறு எந்த பண்டிகைக்கும் ஸ்டிக்கர்களை அனுப்ப மேலே உள்ள படிகளைப் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க: Night Curfew: நாளை முதல் இரவு நேர ஊரடங்கு