7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.கரோனா தொற்றின் பரவல் ஒரு புறம் இருக்க இந்த வெயிலும் மக்களை வாட்டிவதைக்கிறது.

தற்போது சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களில், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தற்போது 100 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டிவதைத்து வருகிறது.மேலும் வட கடலோர மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.