School Holiday: மார்ச் 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

holidays-for-schools-ahead-of-nellaiyappar-temple-chariot-festival
பள்ளிகளுக்கு விடுமுறை

School Holiday: திருநெல்வேலி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், தீப ஆராதணைகளும் நடைபெற்று, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

4 ஆம் நாளான கடந்த 12 ஆம் தேதி வேணுவனத்தில் சுவாமி எழுந்தருளிய திருவிளையாடல், தீபாராதணை, சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றன. நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்புவாக அவதரித்த திருவிளையாடல் நிகழ்ச்சி, சுவாமி சன்னதி பின்புறம் அமைந்துள்ள ஸ்தலத்தில் வைத்து நடைபெற்றது.

School Holiday: மார்ச் 18 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிகழ்ச்சிக்காக முழுதும் கண்ட ராம கோன் வெள்ளி கலையத்துடன் அரண்மனைக்கு பால் எடுத்து செல்லும் நிகழ்வும், கால் இடறி மூங்கில் முகட்டில் பால்கொட்டும் நிகழ்வும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முழுதும் கண்ட ராமபாண்டியன் அனுமதியுடன், மூங்கில் முகட்டை வெட்டும் போது ரத்தம் பீரிடும் நிகழ்வும் நடைபெற்றது.

இதையும் படிங்க: Jammu and Kashmir Budget: ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அரண்மனைக்கு பால் கொண்டு சென்ற, முழுதும் கண்ட ராம கோனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் வேறு வனத்தில் உருவான சுவாமி நெல்லையப்பருக்கு, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு உடையவர் லிங்கபூஜையும், 7 மணிக்கு சுவாமி அம்பாள் ரிஷபவாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனிடையே வரும் வெள்ளிக்கிழமையன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் பக்தர்கள் வருவதுண்டு. அதிலும் தேர் திருவிழா அன்று கூட்டம் அலைமோதும்.

எனவே அன்றைய தினம் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இதையும் படிங்க: IND vs SL 2nd Test: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா