holiday for schools : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

holiday-for-schools-and-colleges-in-erode
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

holiday for schools : அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் இந்த கோயிலில் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.குண்டம் விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் வந்து நின்று இடம் பிடிப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு குண்டத்துக்கு முதல் நாள் தான் பக்தர்கள் வரிசையில் வந்து நிற்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கோவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழா. பண்ணாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம். இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த குண்டம் திருவிழா மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளாவை சேர்ந்த பக்தர்களும் பல்லாயிரக் கணக்கானக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படிங்க : rahu ketu : ராகு கேது பெயர்ச்சி 2022

holiday for schools : சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன.

ஆதலால் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22 செவ்வாய்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

( erode district schools and colleges holiday for tomorrow )