Holiday announcement: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

march-19-is-all-school-holiday
பள்ளிகள் விடுமுறை

Holiday announcement: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள ஹெத்தையம்மன் கோயில் படுகர் சமுதாய மக்களின் குலதெய்வமாகும். ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கோல் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது.

கடந்த ஒரு மாதமாக பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர்.நேற்று காலை பக்தர்கள், அம்மனை வண்ண குடைகளின் கீழ், செங்கோல் ஏந்தி, மடிமனைக்கு வந்தனர். கோத்தகிரி பழமை வாய்ந்த பேரகணி, பெத்தளா, ஒன்னதலை, கூக்கல், சின்ன குன்னுார், எப்பநாடு மற்றும் பெப்பேன் ஆகிய கிராமங்களில் திருவிழா விமர்சையாக நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான நாளை ஹெத்தையம்மன் உலா நடைபெறவுள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக ஜனவரி 8ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் பணி நாளாக அறிவித்து ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: Secret For Hair Growth : தலைமுடி வளர உச்சந்தலை மீது கூடுதல் அக்கறை தேவை

(holiday announcement in the nilgiris)