ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கம் வென்றது இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது.

ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

7 வினாடிகள் இருக்கும்போது ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதையும் இந்திய வீரர்கள் முறியடிக்க 5-4 என இந்தியா வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

இதன் மூலம் 41 வருடத்திற்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கத்தை ருசித்துள்ளது.