Weather Update: அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்

heavy-rain-warning-to-tamil-nadu-by-chennai-meteorological-center
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Weather Update: கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது, இதன் காரணமாக 2ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மழைக்கு வாய்ப்புள்ளது.

கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யும்

தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். 3ஆம், தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது

டெல்டா (தஞ்சாவூர் , திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) , புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை தென் தமிழக மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் கரூர், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்) 3 செண்டிமீட்டரும் , தொண்டி (ராமநாதபுரம்), தூத்துக்குடி துறைமுகம் ஏடபிள்யூஎஸ் (தூத்துக்குடி), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கடலாடி (ராமநாதபுரம்), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 1 செண்டிமீட்டரும் மழை பெய்துள்ளது

தென் தமிழகம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

1ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

New Depression in the Bay of Bengal in the next 48 hours says chennai Meteorological Center

இதையும் படிங்க: Russia-Ukraine war: ரஷ்யாவுக்கு விதிக்கப்பட்ட தடைகளால் இந்தியாவுக்கு பாதிப்பு