கன்னியாகுமரியை வாட்டும் கனமழை !

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது .குமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருகிறது.

அங்கு நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது . இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விவசாய விளை நிலங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்து விவசாய விளைநிலங்கள் சேதமடைந்தன. அதேபோல் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது.

. மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் முகாம் மக்கள் இரவு முழுவதும் சாப்பிட உணவு கூட இல்லாமல் கடும் சிரமப்பட்டு வந்தனர்.