Heavy Rain in Chikkamagaluru: கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது சிக்கமகளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது இந்த மழை 27 ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது சிக்கமகளூர் மாவட்டத்திலுள்ள துங்கா பத்ரா ஹேமாவதி ஆறுகள் மற்றும் துணை ஆறுகள் அருவிகள் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது இதனால் தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு வர வேண்டும் எனவும் அத்தியாவசியம் இன்றி ஆற்றுக்குள் இறங் வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில் மாவட்ட கலெக்டர் மீனா நாகராஜ் வரும் 28ஆம் தேதி வரை அங்கனவாடி பள்ளிக்கு விடுமுறை அளித்து உத்தரவு விட்டுள்ளார் என் ஆர் தாலுகா கொக்ரே கிராமத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்த பொழுது கட்டினமனே கிராமத்தைச் சேர்ந்த ரத்னாகர் அதை ஓட்டி சென்றார் எப்பொழுது பெரிய மரம் ஒன்று விழுந்து ஆட்டோ நொருங்கியது ஆட்டோவில் இருந்த ரத்னாகருக்கு பலத்த அடிபட்ட அவரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் மேலும் மூடிகெரே தாலுகா பாலூரில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது இந்த வீட்டிலிருந்த காயத்ரி என்கின்ற பெண் வீட்டை விட்டு ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார் மேலும் இந்த மழை இன்றும் இடைவிடாது பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது காப்பி தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்பவர்களும் வேலைக்குச் செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் சுற்றுலா பயணிகள் தற்பொழுது பள்ளி விடுமுறை என்பதால் வந்தவர்களும் சுற்றுலா பயணிகள் ஒரு சில இடங்களுக்கு செல்ல முடியாமல் வந்த இடத்தில் தங்கி இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது மொத்தத்தில் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டு மழையால் பல இடங்களில் மண் ச



