national news : பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக சோதனை செய்த தலைமை ஆசிரியர் !

national news : பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக சோதனை செய்த தலைமை ஆசிரியர்
பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக சோதனை செய்த தலைமை ஆசிரியர்

national news : கர்நாடகாவில் பள்ளிக்கு செல்போன் எடுத்துச் சென்றதற்காக மாணவியை ஆடைகளை களைக்க சொல்லி சோதனை செய்ததாக கூறி பள்ளித் தலைமையாசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி கனங்கூர் கிராமம். இங்குள்ள பள்ளிக்கு மாணவி ஒருவர் கைப்பேசியை எடுத்துச் சென்றுள்ளார்.

தலைமையாசிரியர் கடந்த வாரம் பள்ளியில் திடீர் சோதனை நடத்தினார், அதில் அவர் ஒரு மாணவியிடம் செல்போன் இருப்பது தெரியவந்துள்ளது .இதன் தண்டனையாக, அவர் ஆடைகளை அகற்றி, மின்விசிறியின் கீழ் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.national news

இதுதொடர்பாக விசாரிக்கப்பட்ட போது தலைமை ஆசிரியர் மீதான குற்றச்சாடு நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டு,அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : No full lockdown needed : முழு ஊரடங்கு தேவையில்லை !