விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்..!

Rahul Gandhi
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும்

Uttarakhand Election 2022: உத்தரகாண்ட் சட்டப்சபைத் தேர்தலையொட்டி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாகனங்களில் சென்றும், மக்களின் வீடுகளுக்கு சென்றும் வாக்குசேகரித்தார். இதனிடையே அங்கு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இதனை நிறைவேற்றுவோம் வாக்காளர்களுக்கு நான்கு வாக்குறுதிகளை ராகுல்காந்தி வழங்கினார்.

உத்தர காண்ட் மாநிலத்தில் 4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, எல்.பி.ஜி. சிலிண்டர்களின் விலையை ரூ. 500க்கு குறைவாக நிர்ணயம் செய்தல், 5 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 40,000 ரூபாய் மற்றும் வீட்டு வாசலில் மருத்துவ வசதிகள் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Horoscope today: இன்றைய ராசி பலன்

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வதாக நாங்கள் உறுதியளித்தோம், அதை நாங்கள் நிறைவேற்றினோம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னதாக ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்று கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, விளக்குளை ஏற்றி வழிபாடு செய்தார். இது குறித்த வீடியோவை தமது ட்விட்டரில் பதிவிட்டார். மாநிலத்தின் ஒளி மயமான எதிர்காலத்திற்காக பிரார்த்திக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Congress Will Give LPG Cylinder For Less Than ₹ 500 If Chosen To Power: Rahul Gandhi In Uttarakhand

இதையும் படிங்க: tn news : வண்டலூர் பூங்காவில் கரடி உயிரிழப்பு!