HBD Vidya Balan: நடிகை வித்யா பாலன் பிறந்தநாள் இன்று..!

Happy Birthday Vidya Balan
நடிகை வித்யா பாலன் பிறந்தநாள்

HBD Vidya Balan: வித்யா பாலன் (பிறப்பு ஜனவரி 1, 1978) பாலிவுட் திரைப்படங்களில் மற்றும் விளம்பரப் படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். சமூகவியல் பட்டபடிப்பு முடித்தவுடன், வித்யா பாலன், தனது திரைத்துறை பயணத்தை பல இசைக் காணொளிகள், சவற்கார விளம்பரங்கள் மற்றும் பல வணிகரீதியிலானவற்றில் தொடங்கி, பாலோ தேகோ (2003) என்னும் வங்காள திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திரைத்துறைக்குள் நுழைந்தார். பிறகு இவர் இந்தி திரைப்படமான பரிநீத்தா (2005) என்பதில் அறிமுகமாகி, பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதினைப் பெற்றார் மேலும் தனது முதல் வணிக வெற்றியை ராஜ்குமார் ஹிரானியின் லகே ரஹோ முன்னாபாய் (2006) படத்தின் மூலம் பெற்றார் அதைத் தொடர்ந்து ஹே பேபி (2008) மற்றும் பூல் பூலையா (2008) ஆகிய படங்களில் நடித்தார். அதில் பூல் பூலையாவில் தனது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேரின் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2009 இல் ஆர். பால்கியின் திரைப்படமான பாவுக்கு, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றார். 59வது தேசியத் திரைப்பட விருதுகளில் டர்ட்டி பிக்சர் என்ற இந்தித் திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றார்.

ஆரம்பக்கால வாழ்க்கையும் பின்னணியும்

வித்யா பாலன் கேரளாவின், பாலக்காட்டில் உள்ள ஒரு தமிழ் பேசும் ஐயர் குடும்பத்தில், பி.ஆர். பாலன் (இ.டி.சி சேனலின் துணைத்தலைவர்) என்பவருக்கும் இல்லத்தரசியான சரசுவதி பாலனுக்கும் பிறந்தார். வித்யாவிற்கு பிரியா என்னும் மூத்த சகோதரி ஒருவரும் உள்ளார். ஒரு காணொளி நேர்காணலில், இவர் தன்னை ”மிகுந்த கடவுள் நம்பிக்கையுடைவர்” என்றும், தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோவில் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வித்யா பாலன் தன் பள்ளிப்படிப்பை புனித அந்தோணி பள்ளியிலும் அதன் பிறகு தனது சமூகவியல் பட்டப் படிப்பை புனித சேவியர் கல்லூரியிலும் முடித்துள்ளார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலை (எம்.ஏ) படிப்பைப் படிக்கும் பொழுது, தனது முதல் திரைப்பட வாய்ப்பைப் பெற்றார்.
தொழில் வாழ்க்கை
ஆரம்பக்கால திரைத்துறை வாழ்க்கை

முதன் முதலாக இவர் மோகன்லாலுடன் இணைந்து “சக்கரம்” என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது, ஆனால் அப்படம் தள்ளி வைக்கப் பெற்றது. அதன்பிறகு இவர் தமிழ் திரைப்படமான ரன் திரைப்படத்தில் நடிக்க கையொப்பமிட்டார், ஆனால் காரணங்கள் வெளியிடாமல் முதல்கட்ட படப்பிடிப்பிற்குப் பிறகு நீக்கப் பெற்றார். அவருக்கு பதிலாக மீரா ஜாஸ்மீன் அவ்வேடத்தில் நடித்தார். மீண்டும் சக்கரம் படம் பிருதிவிராஜை முதன்மையாகக் கொண்டு துவங்கிய பொழுது, வித்யா பாலனுக்கு பதிலாக மீரா ஜாஸ்மீனே நடித்தார். இவர் ஸ்ரீகாந்த்துடன் நடிக்கவிருந்த இரண்டாவது தமிழ் திரைப்படமான மனசெல்லாம் படத்திலிருந்தும் ’செயல்திறமற்றவர்’ என்கிற அடிப்படையில் நீக்கப் பெற்றார் மற்றும் இவருக்கு பதிலாக திரிஷா கிருஷ்ணன் அதில் நடித்தார்.

அதன்பிறகு இவர் தன்னை தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் திசைதிருப்பிக் கொண்டார். 1998 முதல், இவர் எண்ணற்ற தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் தோன்றினார், அவற்றில் பலவற்றை பிரதீப் சர்க்கார் இயக்கினார். இவர் இசைக் காணொளிகளின் துணை பாத்திரங்களையும் ஏற்று, இயுஃபோரியா, சுபா முத்கல் மற்றும் பங்கஜ் உதாஸ் போன்ற இசைக்கலைஞர்களின் பாடகர்கள் மற்றும் இசைக்குழுவினருடனும் தோன்றினார். வித்யா பாலன் ஹம் பாஞ்ச் என்ற தொலைக்காட்சி தொடரின் முதல் பருவத்தின் சில பகுதிகளில் ராதிகா மாதூர் என்னும் கதாபாத்திரத்தில் தோன்றினார், ஆனால் முதல் பருவத்தின் இறுதியில் இவருக்கு பதிலாக அமிதா நங்கியா என்பவர் நடித்தார்.

திருப்புமுனை, 2003-தற்காலம்

2003 இல், இவர் வங்காளித் திரைப்படமான பாலோ தேகோ வில் தோன்றியதன் மூலம், கொல்கத்தாவின் அனந்தலாக் புரஸ்கார் சிறந்த நடிகை விருதினை வென்றார். வித்யா பாலன் அடுத்து அறிமுகமான இந்தி திரைப்படமான பரிநீத்தா மிகுந்த விமர்சனரீதியிலான வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தில் அவரது செயல்திறம் விமர்சகர்களால் வரவேற்கப்பெற்று, அவருக்கு பிலிம்பேரின் சிறந்த அறிமுகநடிகைக்கான விருதினையும் மற்றும் பிலிம்பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கான முன்மொழியும் வாய்ப்பினையும் பெற்றுத்தந்தது. இவரது முதல் இரண்டு படங்களின் வெற்றிக்குப் பிறகு, மனசெல்லாம் படத்திலிருந்து தன்னை நீக்கிய அதே தயாரிப்பாளரால் தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனுக்கு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்க கையொப்பமிடும்படி ஆர்வமுடன் அழைக்கப்பெற்றார், ஆனால் இவர் அந்த வாய்ப்பை மறுத்தார் மற்றும் இவருக்கு பதிலாக இப்படத்தில் அசின் தொட்டும்கல் கையொப்பமிட்டார். 2006 இல், இவர் மிகப்பெரிய வெற்றிப்படமான லகே ரஹோ முன்னாபாய் படத்தில் சஞ்சய் தத்துக்கு மாறான பாத்திரத்தில் தோன்றினார். மீண்டும் ஒருமுறை இவரது செயல்திறம் விமர்சகர்களால் மிகுந்த வரவேற்பைப் பெற்றது[6] மற்றும் இப்படம் அவ்வாண்டின் மிகுந்த மொத்தவருமானம் ஈட்டிய இரண்டாவது திரைப்படமாகத் திகழ்ந்தது.

மணிரத்னம் அவர்களின் சிறந்த விமர்சன வரவேற்பைப் பெற்ற குரு திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த முதல் படமாக வித்யா பாலனுக்கு அமைந்தது, இதில் இவர் தண்டுவட மரப்பு நோயால் அவதிப்படும் பெண்ணாக நடித்தார். இத்திரைப்படம் மிகச்சிறந்த வசூலைப் பெற்றது[8] மற்றும் இவரது பாத்திரமும் வெகுவாக பாராட்டைப் பெற்றது. இவர் நடித்து அடுத்து வெளியான இரண்டு படங்களான, சலாமே இஷ்க்(Salaam-e-Ishq: A Tribute To Love) (2007) மற்றும் ஏக்லவ்யா – Eklavya: The Royal Guard (2007) ஆகிய படங்கள் வெற்றி பெறமால் தோல்வியடைந்தனஆனால் ஏக்லவ்யா படம் 80 வது அகாடமி விருதுகளுக்கான ஆஸ்கார் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூர்வ பட்டியலில் தேர்ந்தெடுக்கப் பெற்றது.அவ்வாண்டிலேயே வித்யா பாலன் நடித்து இறுதியாக வெளியான இரு படங்களான, ஹேய் பேபி (2007) மற்றும் பூல் புலைய்யா (2007) ஆகியவை மிகச்சிறந்த வசூலைக்குவித்த படங்களாக அமைந்தன.

2009 இல், பாலன் பா எனும் திரைப்படத்தில் இளம் மகளிர் மருத்துவராகவும் அதே சமயம் முதிரா முதுமையுடைய 12 வயது மகனுக்கு தாயாகவும் நடித்தார். இப்படத்தில் அமிதாப் பச்சன் பாலனின் மகன் ஆரோவாக நடித்தார். இப்படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் பாலனின் நடிப்புத்திறனை வெகுவாகப் பாராட்டினர். ரெடிப்பின் சுகன்யா வர்மா எழுதியதாவது, ” வித்யா பாலன் மிக கச்சிதமாக தனது தாய் கதாப்பாத்திரத்தில் பொருந்தியுள்ளார் மேலும் மற்ற பாலிவுட் படங்களில் தாய் காதப்பாத்திரத்தில் வரும் நடிகைகள் போல் அல்லாமல் நன்றாக நடித்துள்ளார். 1980களில் நல்லதொரு நடிகையான கடுமையான, நேர்த்தியான கதாப்பாத்திரத்தில் நடித்த டிம்புள் கப்பாடியவை நினைவுப்படுத்துகிறார்.” தி டைம்ஸ் ஆப் இந்தியாவின் நிக்காட் காஸ்மி “பாலன் தனது நடிப்பாற்றல் மூலமாக பாலிவுட் தாய்களுக்கு நல்லதொரு கண்ணியத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது அமைதிப்பாங்கான நடிப்புடன் அவரது உணர்ச்சி வெளிப்பாடுகளால், இவர் தைரிய மிகு தாயாக உருமாறியிருந்தார்”. இவருடைய சித்தரிப்பு, இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான ஸ்டார் ஸ்க்ரீன் விருதையும் பெற்றுத்தந்தது.

இதையும் படிங்க: Happy New year 2022: புத்தாண்டு ராசி பலன்..!