பச்சை பூஞ்சை நோய் பதித்த நபர் !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தனித்தனியே ஊரடங்கை தளர்வுகளுடன் நடத்திவருகிறது.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு கருப்பு,மஞ்சள் பூஞ்சை  மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்கள் தாக்குவது கண்டறியப்பட்டது.மேலும் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய நபர் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் அவர் கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு 90 சதவீத நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு நடந்த பரிசோதனையில், தற்போது பச்சை பூஞ்சை நோய் இருப்பது தெரிய வந்துள்ளது.