International womens day: மகளிர் தினத்தை கொண்டாடிய ஆளுநர் தமிழிசை, ரோஜா எம்.எல்.ஏ

தமிழிசை, ரோஜா

International womens day: மகளிர் தினத்தையொட்டி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனும், சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

நாளை சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. பெண்களும் களப்பணியாற்றினால் ஆளுநராக ஒரு மாநிலத்திற்கு அல்ல இரண்டு மாநிலத்தையே ஆளலாம் என்று நிரூபித்த தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்திரராஜனும், துணிச்சலுக்காக பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாய் திகழும் நடிகை ரோஜாவும் இன்று ஹைதராபாத் ஆளுநர் மாளிகை ராஜ் பவனில் சந்தித்தனர்.

தமிழிசை செளந்திரராஜனின் அழைப்பை ஏற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார் ரோஜா. பின்பு இருவரும் மகளிர் தினத்தை உற்சாகமுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். இந்தப் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

இதையும் படிங்க: Omicron: முதல்முறையாக மான்களில் ஒமைக்ரான் கண்டுபிடிப்பு