Gold Rate today: கிடுகிடுவென ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை

தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை உயர்வு

Gold Rate today: தங்கத்தின் விலை அநியாயத்துக்கு உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை பயணித்து வருவதால் மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு, 1,856 ரூபாய் உயர்ந்தது. 1 சவரன் 39 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனையானது. இது உச்சமாக பார்க்கப்படுகிறது.

உக்ரைன் எல்லையில் தன் படைகளை ரஷ்யா நிறுத்தி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலால் மொத்த உலகமும் இப்போது இதுக் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இது, சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சர்வதேச சந்தைக்கு ஏற்ப நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை மாற்ற அடைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்தது. மூன்றாவது முறையாக ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.4,951க்கும் சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.4,801-ம், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.38,408-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியும் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.70-க்கும், கிலோ ரூ.70,000-க்கும் விற்கப்படுகிறது.

Today gold rate on 25.02.2022

இதையும் படிங்க: Crow: காக்கை வாகனத்தின் மீது வந்து தானாக மோதுவதன் காரணம் என்ன?