ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏறுவதும், இறங்குவதுமான நிலை இருந்து வந்தது. ஊரடங்கு காலத்தில் வேகமாக உயரத் தொடங்கிய நகை விலை கடந்த 25ஆம் தேதி முதல் சரிவை சந்தித்தது. அப்போது, ஒரு சவரன் விலை ரூ.37,920 வரை குறைந்தது.

இது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை தந்தது. ஆனால் நேற்று காலையில் தங்கம் விலை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிடு,கிடுவென உயர்வை சந்தித்தது.

அதாவது கிராமுக்கு அதிரடியாக ரூ.76 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,816க்கும், சவரனுக்கு ரூ.608 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,528க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் விலையை விட மாலையில் கிராமுக்கு ரூ.78 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4818க்கும், சவரனுக்கு ரூ.624 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,544க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது நகை வாங்குவோரை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சவரனுக்கு ரூ.128 விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4834க்கும், ஒரு சவரன் நகை ரூ.38,672க்கும் விற்பனையானது. இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.38,472-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,809-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசு உயர்ந்து ரூ.64-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வதும், குறைவதும் ஆக உள்ளதால், நகை பிரியர்கள் தங்கம் எப்பொழுது வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here