இன்றைய தங்கம் விலை

கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,568 வரை குறைந்து, கடந்த 11 மாதங்களுக்கு பிறகு நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையை போல வெள்ளி விலையும் நேற்று சரிந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 72 ரூபாய் 80 காசுக்கும், ஒரு கிலோ ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனையான வெள்ளி, நேற்று கிராமுக்கு 2 ரூபாய் 40 காசும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 400-ம் குறைந்து, ஒரு கிராம் 70 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ ரூ.70 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து ரூ.33,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தங்கத்தின் விலை சவரன் ரூ.35,312க்கு விற்பனையானது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனை ஆகிறது.