‘கொரோனா தேவி’ என்ற பெயரில் அம்மன் சிலை..!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் ‘கொரோனா தேவி’ என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பின், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம்.

பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.